நீதிமன்ற அனுமதி பெற்று அனில் அகர்வால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயன்றால் பொதுமக்கள் ஒன்று திரண்டு மூடுவார்கள் என்று வைகோ தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களின் உடல் பிணவறையில் உள்ளதாக கூறினார். பிணவறைக்கு சென்று தான் பார்க்க முயன்ற போது போலீசார் அதற்கு அனுமதி அளிக்க வில்லை என்றும் கூறினார். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் போலீசார் அரசு மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு கூலிப்படையாக செயல்பட்டுள்ளதாகவும் வைகோ தெரிவித்தார்.
Vaiko said the public would have to rush if Anil Agarwal was trying to open the Sterlite plant with the permission of the court.