தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகம், புதுவையில் இன்று காலை முதல் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் போலீசார் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.
Dravida Munnetra Kazhagam and other opposition parties in called for bandh on today.