அண்ணாநகர் பகுதியில் போலீசார் இன்று மீண்டும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 வயது இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். தூத்துக்குடியில் உயிர்கொல்லி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற போலீசார துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 17 வயது மாணவி உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் தூத்துக்குடி அண்ணாநகர் 7வது தெருவில் இன்று போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.