இனி இந்த வழக்கு தொடர்பாக எங்களை தொல்லை செய்யக்கூடாது என போப்பையா தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிண்டலாக தெரிவித்தனர். கர்நாடக தற்காலிக சபாநாயகர் போப்பையாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கே.ஜி போப்பையாவை ஆளுநர் வஜுபாய் வாலா நேற்று நியமித்தார். ஆளுநர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவசர மனுவை காங்கிரஸ், மச்சார்பற்ற ஜனதா தளம் தாக்கல் செய்தது, இதனைத் தொடர்ந்து இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது.
Dont disturb us anymore regarding this case says supreme court judges on the case of Karnataka assembly.