விஜயின் முதல்பட ரிலீசின் போது தனக்கும் தியேட்டர் பிரச்சினை இருந்ததாக இயக்குநரும், விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரித்துள்ளார். இந்தியாவின் முதல் கிளாஸ்டோஃபோபிக் வகை படமாக வெளிவரவுள்ள, ஆண்டனி படத்தின் படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சி நடிகைகள் ஜெயசித்ரா, ரேகா, தயாரிப்பாளர்கள் தேனப்பன், தங்கதுரை, இயக்குனர்கள் பிரவின்காந்த், யுரேகா உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தமிழ் சினிமாவில் தற்போது வரும் இளம் இயக்குனர்கள் எந்தவித சமரசமுமின்றி படத்தை எடுப்பதாக பாராட்டினார். இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது, பலனை எதிர்ப்பார்க்காமல் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருந்தால், நிச்சயம் ஒரு நாள் வெற்றி தேடி வரும். ஒவ்வொரு தோல்வியும் கடவுள் நமக்கு வைக்கும் டெஸ்ட். தோல்விகள் என்பது வெற்றியின் படிக்கட்டு" என இவ்வாறு அவர் பேசினார்.