ஆட்சியமைக்க பாஜகவுக்கு அழைப்புவிடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் பாஜக எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதத்தை எடியூரப்பா வழங்கியுள்ளார். மல்லேஸ்வரத்தில் இன்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடியூரப்பாவை பாஜக எம்எல்ஏக்கள் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கையெழுத்துடன் கூடிய கடிதத்துடன், ஆளுநரை ராஜ்பவனில் எடியூரப்பா, ஈஸ்வரப்பா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சந்தித்தனர். காலை 11.15 மணிக்கு இந்த சந்திப்பு ஆரம்பித்தது.
BS Yeddyurappa elected as BJP legislative party leader in Karnataka.