கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், தமிழர்கள் அதிகம் இருக்கும் தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் கட்சியே தற்போது முன்னிலை வகிக்கிறது. கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி உள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது. இந்த நிலையில் பல்வேறு ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. புலிகேசி நகரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அகந்த ஸ்ரீனிவாச மூர்த்தி முன்னிலை வகிக்கிறார். சர்வக்ஞா நகரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜார்ஜ் முன்னிலை வகிக்கிறார். அதேபோல் சிவாஜி நகரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரோஷன் முன்னிலை வகிக்கிறார். மேலும் தமிழர்கள் அதிகம் இருக்கும் சிக்பேட் பகுதியில் பாஜக கட்சியின் உதய் பி கருடாச்சார் முன்னிலை வகிக்கிறார்.
Karnataka Election Results: Congress is leading in most of the Tamil People's constituencies.