சாமுண்டேஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தராமையாவை தோல்விக்கு விரட்டிக் கொண்டிருப்பது அவரின் மிக நெருங்கிய நண்பராக விளங்கிய ஜி.டி.தேவகவுடா. விவசாய குடும்பத்தில் பிறந்த ஜி.டி.தேவகவுடா 1978ம் ஆண்டு, அரசியலில் கால் வைத்தார். 1983ம் ஆண்டு முதல் சித்தராமையாவுடன் ஜி.டி.தேவகவுடாவுக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக நெருக்கமாக தொடர்ந்தது. ஜி.டி.தேவகவுடா முதல் முறையாக வகித்த பதவி ஜில்லா பஞ்சாயத்து தலைவர். இதன்பிறகு ஹுன்சூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
GT Devegowda the man who leads on one-time friend Siddaramaiah.