மன்னார்குடி குடும்பங்களின் அடுத்தடுத்த மோதலை ஆட்சியில் உள்ளவர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். சசிகலாவிடம் சில வீடியோக்களைப் போட்டுக் காண்பித்தார் தினகரன். அதில் சொல்லப்பட்ட விஷயங்கள்தான் சசிகலாவின் கோபத்தை அதிகப்படுத்தின' என்கின்றன குடும்ப வட்டாரங்கள். சசிகலாவின் பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது' என தினகரன் தரப்பு வழக்கறிஞர் அனுப்பிய நோட்டீஸ், திவாகரன் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ' இரண்டு நாட்களில் ஊடகங்களை சந்திப்பேன்' என ஆதரவாளர்களிடம் பேசிய திவாகரன், இன்று மன்னார்குடியில் மீடியாக்களை சந்தித்தார். எனக்கு மனநலம் சரியில்லை என்று ஆதங்கத்தில் தினகரன் கூறியிருக்கிறார். இனி சசிகலாவை சகோதரி என அழைக்க மாட்டேன். அவர் என்னுடைய முன்னாள் சகோதரி. சசிகலா நோட்டீஸ் அளித்ததால், எங்களுடைய அரசியல் பயணம் நின்றுவிடாது. தினகரனின் மிரட்டல் அரசியலின் உச்சம். ஓ.பன்னீர் செல்வம் , சசிகலா விரோதத்துக்குத் தினகரன்தான் காரணம்" எனப் பேசினார்.
Here are the reasons behind the Sasikala's notice to her brother Divakarn issue.