கோவை பாரதியார் பல்கலைகழக உளவியல் துறை தலைவர் ஆபாசமாக பேசியதாக, கேரள மாணவி பரபரப்பு புகார் அளித்துள்ளார். இதுகுறித்த விசாரணையை போலீசார் கையிலெடுத்துள்ளனர். கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிதா. இவர் கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் முதுகலை அறிவியல் முதலாமாண்டு உளவியல் படித்து வந்தார். ஹரிதா பல்கலைகழக பெண்கள் விடுதியில் தங்கி படிப்பை தொடர்ந்து வந்தார்.