கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியுடன் மதசார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வழி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சித்தராமையா மீண்டும் முதல்வராக பதவி ஏற்பது சந்தேகம்தான் என்றும் கூறியுள்ளனர். கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது. இந்த நிலையில் தற்போது பல்வேறு ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.இதில் பாஜக கட்சி பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Most exit polls have predicted a hung house with the BJP in the lead. If it were to be a hung house, then the Janata Dal(S) would play kingmaker in the state.