des:இந்திய பல்கலைக்கழக வரலாற்றில் பறை இசைக்காக ஓராண்டு பட்டயப் படிப்பை அறிமுகம் செய்து 2-வது ஆண்டாக நடைமுறைப்படுத்துகிறது கோவை பாரதியார் பல்கலைக்கழகம். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பறை இசைக்கு ஒரு படிப்பைக் கொண்டு வரும் முயற்சியில் நிமிர்வு கலையகத்தின் நிர்வாகிகள் ஈடுபட்டனர். பாடத் திட்டம் தயாரிப்பது, பல்கலைக்கழக பாடத்திட்டக் குழுவின் ஒப்புதலைப் பெறுவது என இரவு பகலாக உழைத்து இதனை சாதித்திருக்கிறார்கள்.