குட்கா விற்பனை விவகாரம்..தடை கோருகிறது தமிழக அரசு- வீடியோ

Oneindia Tamil 2018-05-10

Views 256

சட்டவிரோத குட்கா விற்பனை தொடர்பான புகாரில் சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த விசாரணைக்கு தடை கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்கவும் கடந்த 2013ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தடை விதித்தது. இந்த வழக்கிகை விசாரித்த நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமெனக் கூறி கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், இந்த வழக்கின் மீதான சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில், இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


TN Government went appeal on Gutka Case on SC. Earlier Chennai High Court ordered for CBI probe on Gutka case which is filed by DMK MLA Anbazhagan.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS