அப்பா, அப்பா என வாய் நிறைய அழைத்த 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தாயின் கணவரை போலீஸார் கைது செய்தனர். ஹைதராபாத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது இறந்த கணவனுக்கும் அந்த பெண்ணுக்கும் ஒரு பெண் குழந்தை இருந்தது. 13 வயதை எட்டிய அந்த குழந்தை தற்போது 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் அங்குள்ள கடையில் வேலை செய்து வருகிறார். அந்த சிறுமி கடந்த ஏப்ரல் மாதம் பருவ வயதை அடைந்தார். சிறுமியின் தாய் பணிக்கு சென்றவுடன் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மாற்றாந்தந்தை பலாத்காரம் செய்தார். மேலும் இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று்ம அப்படி சொன்னால் உங்கள் குடும்பத்தை காப்பாற்ற மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இதனால் தனது தாயிடம் இந்த கொடுமையை சொல்ல அந்த சிறுமி மிகவும் பயந்தார்.
இந்த செல்போன் டவரை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்த போலீஸார் அவரை கைது செய்தனர். இதனிடையே அந்த சிறுமி குழந்தைகள் உரிமை ஆணையத்தை அணுகி எனக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லை. நான் வீட்டில் இருந்தால் இதுபோல் மீண்டும் மீண்டும் சம்பவங்கள் நடக்கலாம். அப்பா இது போல் செய்யாதீர் என்று நான் கூறியும் அவர் கேட்கவில்லை. நான் ஹாஸ்டலில் தங்கி நன்கு படித்து ஒரு போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற லட்சியத்தை அடைய வேண்டும் என்று கூறியுள்ளார்.