வெளிநாட்டில் வேலை பார்க்கும் தம்பியின் மனைவியை மைத்துனர் வெட்டி கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள மேலாளவந்தசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜசேகர். இவருக்கும் எஸ்தர் என்ற பெண்ணுக்கும் 3 வருடங்கள் முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு, 2 வயதில் சர்வன் என்கிற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், ஜோசப், சிங்கப்பூரில் பெயிண்ராக வேலை பார்த்து வருகிறார். எஸ்தர் தனது குழந்தையுடன், மேலாளவந்தசேரி கிராமத்தில் வசித்து வந்தார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சொத்து பிரச்சினை காரணமாக எஸ்தரை கொலை செய்ததாக நெல்சன் ஒப்புக்கொண்டார்.
எஸ்தர் சடலத்தை நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடல் பகுதியில் வீசியதாக நெல்சன் போலீசாரிடம் கூறினார். இதன்பிறகு நெல்சன் கூறிய இடத்தில், போலீசார், உடலை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால், எஸ்தர் உடல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நெல்சனிடம் போலீசார் மீண்டும் துருவி துருவி விசாரித்தபோது, வேறு ஒரு தகவலை அளித்தார். எஸ்தரை கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி இரண்டு சாக்கு மூட்டைகளில் கட்டி மேலாளவந்தசேரி அருகில் உள்ள காரிச்சாங்குடியில், ஆற்றங்கரையில் உள்ள புதரில் வீசியதாக கூறினார். இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் அங்கு அழைத்துச் சென்றனர்.
Brother-in-law kills his brother's wife near Mannargudi.