நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கடத்தப்படவிருந்த மணல் 3000-க்கும் அதிகமான மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பரமத்திவேலூரை அடுத்துள்ள பொன்மலர்பாளையம், கொந்தலம், எஸ்.கே.மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மணலை மூட்டைகளில் கட்டிக் கொண்டு இரு சக்கர வாகனங்கள் மூலம் கடத்தப்பட்டு வருவதாக நாமக்கல் கனிமவளத்துறைக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.