கோவையில் சராசரி அளவை தாண்டி கோடை மழை பெய்து வருவதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் கணித்து உள்ளனர். கோவையில் கடந்த சில நாட்களாக கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழையால் கோடை வெப்பம் தணிந்து உள்ளது. நேற்று முன் தினம் இரவு தொடங்கி விடிய விடிய மழை பெய்தது.