வனத்துறை சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த திமுக வட்ட செயலாளருக்கு சொந்தமான குடிநீர் ஆலையை வருவாய் வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
சென்னை ஆவடி பெருநகராட்சிக்கு உட்பட்ட 37 வது வார்டில் திமுக வட்ட செயலாளர் சுப்ரமணிக்கு சொந்தமான குடிநீர் ஆலை உள்ளது. குடியிருப்பு நிறைந்த பகுதியில் இருபதால் நிலத்தடி நீர் குறைந்து வருவதாக வருவாய் துறையினருக்கு புகார் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ உள்ளிட்ட வருவாய் துறையினர் குடிநீர் ஆலையை சோதனை செய்தனர். இதில் சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறு அமைத்து 25 லிட்டர் மற்றும் 1,2 லிட்டர் கேன்களில் நிரப்பி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.மேலும் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் எந்த அனுமதியும் பெறாமல் ஆலை செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது. இதை அடுத்து குழாய் இணைப்புகளை துண்டித்ததோடு ஆலையை இழுத்து மூடி சீல் வைத்தனர்.இந்த சம்பவத்தின் போது ஆலை உரிமையாளர் சுப்ரமணி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் உதவுயுடன் அனைத்திற்க்கும் சீல் வைத்தனர்.இந்த நிகழ்வின் போது ஆவடி பொருப்பு வட்டாட்சியர் காந்திமதி, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உட்பட பலர் இருந்தனர்.