இருட்டு அறையில் முரட்டு குத்து - விமர்சனம் #IruttuAraiyilMurattuKuththuReview

Filmibeat Tamil 2018-05-04

Views 718

Goutham karthik starred 'Iruttu araiyil murattu kuththu' is an adult horror movie. Irutttu araiyil murattu kuththu is an adult comedy movie having double meaning jokes and comedy scenes. The movie got released today and here is the movie review for you guys.
'ஹரஹர மஹாதேவகி' அடல்ட் படத்தை எடுத்த சந்தோஷ் பி.ஜெயக்குமாரின் அடுத்த படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. படத்தின் டைட்டில் முதல் ட்ரெய்லர் வரை எல்லாமே டபுள் மீனிங் வசனங்களாலும், காட்சிகளாலும் நிரம்பிய இந்த அடல்ட் ஜானர் படம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்கள் எதிர்பார்த்தபடி திருப்தியாக வந்திருக்கிறதா?
கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், ஷா ரா ஆகிய நால்வரும் தாய்லாந்தின் பட்டாயா நகரில் இருக்கும் சொகுசு பங்களாவிற்குச் செல்கிறார்கள். அங்கிருக்கும் வித்தியாசமான நோக்கம் கொண்ட பேய் ஒன்று அவர்களிடம் தன்னுடைய தேவையை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறது. அந்தப் பேயிடம் இருந்து அவர்கள் தப்பித்தார்களா, அதற்காக அவர்கள் செய்தது என்ன என்பது தான் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் கதை.
இந்தப் படம் ஹாலிவுட்டில் வெளியான 'ஹேண்ட்ஜாப் கேபின்' எனும் ட்ரெய்லரை தழுவி உருவான கதை. இந்தப் படத்திற்கு ஏற்றப்பட்ட அடல்ட் இமேஜ் ஹைப் காரணமாக ரசிகர்களே ரிலீஸை எதிர்பார்க்கத் தொடங்கினர். ஃபேமிலி ஆடியன்ஸ், டிவி ரைட்ஸ் ஆகியவற்றிற்கு சிக்கல் வரும் என "A" சர்ட்டிஃபிகேட் வாங்க பலரும் அஞ்சும் நிலையில், இளைஞர்களை மட்டுமே குறிவைத்து முழுக்க முழுக்க அடல்ட் படமாகவே ப்ரொஜெக்ட் செய்யப்பட்டது இந்தப் படம். தொடர்ந்து, வெளியான டைட்டில் போஸ்டர் முதல், டீசர், ட்ரெய்லர், பாடல் என எல்லாமே டபுள் மீனிங் காட்சிகளால் நிரம்பியிருந்தன.
தமிழ் சினிமாவில் அடல்ட் ஜானர் படங்கள் வெளிவருவது அபூர்வம். அந்தக் குறையை தான் போக்குவதாகக் கூறி அடுத்தடுத்து அடல்ட் ஜானர் படங்களை எடுத்து வருகிறார் சந்தோஷ் பி.ஜெயக்குமார். அடல்ட் படத்தில் ஹாரர் ஜானரை இணைத்து அடல்ட் ஹாரராக 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தை உருவாக்கியிருக்கிறார். அடல்ட் படம் என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து விட்டதால் எந்தக் கவலையும் இன்றி பிரித்து மேய்ந்திருக்கிறார் இயக்குநர்.
#iruttuaraiyilmurattukuththu #review #gauthamkarthik

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS