காவிரி விவகாரத்தில் கர்நாடக தேர்தலை காரணம் காட்டிய மத்திய அரசை நமது அம்மா நாளிதழ் சரமாரியாக விளாசியுள்ளது. காவிரி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி நீர் பங்கீட்டிற்கான வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் அவகாசம் கோரியது. கர்நாடக தேர்தலை காரணம் காட்டி காவிரி வழக்கில் மூன்றாவது முறையாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அவகாசம் கோரியது. பிரதமரும், அமைச்சரும் தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளதால் ஒப்புதல் பெற முடியவில்லை என்று தெரிவித்தது.
ADMK party's Namadhu Amma Daily slams Central govt in the Cauvery issue.