ஆளில்லா விமானத்தை பறக்க வைக்கும் தல அஜித்- வீடியோ

Filmibeat Tamil 2018-05-04

Views 4.9K

சென்னையில் உள்ள எம்.ஐ.டி.யில் ஆளில்லா விமானத்தை உருவாக்கும் ஆலோசகர் மற்றும் டெஸ்ட்
பைலட்டாக நடிகர் அஜித் குமாரை நியமித்துள்ளனர்.

விமானம் ஓட்டும் உரிமம் வைத்துள்ளார் அஜித் குமார். அவர் ஆளில்லா சிறிய ரக விமானங்களை
இயக்குவதில் வல்லவர். அவர் ஆளில்லா விமானங்களை இயக்கும்போது எடுத்த புகைப்படங்கள் சமூக
வலைதளங்களில் வெளியாகின.

இந்நிலையில் அஜித்துக்கு புதிய பொறுப்பு ஒன்று கிடைத்துள்ளது.
மெடிக்கல் எக்ஸ்பிரஸ்- 2018 யுஏவி சேலஞ்ச் போட்டியின் இறுதிச் சுற்று ஆஸ்திரேலியாவில் உள்ள
குயீன்ஸ்லேண்டில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்ட
நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தியா உள்ளிட்ட 55 நாடுகள் மட்டுமே இரண்டாவது சுற்றுக்கு தகுதி
பெற்றுள்ளது.

மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்சில் கலந்து கொள்ளும் குழுவுக்கு உதவி செய்ய அஜித் குமாரை எம்.ஐ.டி.
நியமித்துள்ளது. அவர் ஆளில்லா விமானத்தை உருவாக்கும் ஆலோசகர் மற்றும் டெஸ்ட் பைலட்டாக
நியமிக்கப்பட்டுள்ளார்.

யுஏவி சேலஞ்சில் ஆளில்லா விமானத்தை 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நோயாளியின்
இடத்திற்கு செல்லவிட்டு அவரிடம் இருந்து ரத்த மாதிரியை சேகரித்துக் கொண்டு திரும்பி வர
வேண்டும். மாதிரிகளை ஆய்வகத்திற்கு கொண்டு வருவது தான் சவால் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Madras Institute of Technology has appointed actor Ajith Kumar as its ‘Helicopter Test Pilot and UAV System Adviser’. He will help the team to
develp a UAV that will be flown at a competition in Australia.

#ajith #MIT #plane #flight #Helicoptertestpilot

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS