ஸ்ரீதேவிக்கான தேசிய விருதை அவரது கணவர் மற்றும் மகள்கள் பெற்றுக் கொண்டனர். தேசிய விருதுகள் வழங்கும் விழா நேற்று மாலை டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தான் விருதை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டதால் ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பல கலைஞர்கள் விருது விழாவை புறக்கணித்தனர். பலருக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விருதுகளை வழங்கினார். மாம் இந்தி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஸ்ரீதேவிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அவர் சார்பில் அவரின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி மற்றும் குஷி ஆகியோர் விருதை பெற்றுக் கொண்டனர். ஸ்ரீதேவிக்கான தேசிய விருதை ஸ்மிருதி இரானி அல்ல குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். வழக்கத்திற்கு மாறாக மத்திய அமைச்சர் விருது கொடுத்தது பலரையும் கோபம் அடையச் செய்துள்ளது.