நீட் தேர்வை நிரந்தரமாக விலக்கு மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் கடலூரில் இன்று நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்ககோரியும் , காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தொடர்ந்து தாமதப்படுத்தியும் வரும் மத்திய அரசைக் கண்டித்து இன்று கடலூர் மஞ்சக்குப்பத்தில் , தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தமிழர் உரிமைக்கான மாணவர்கள் இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.