கர்ணனாக விக்ரம் நடிக்கும் பிரமாண்ட ஹிந்தி படம்- வீடியோ

Filmibeat Tamil 2018-05-03

Views 4

காலத்தை வென்ற காப்பியமான மகாபாரதத்தின் இணையற்ற பாத்திரம் கர்ணன். இந்தப் பாத்திரத்தில் நடிக்க விரும்பாத நடிகர்களே இருக்க முடியாது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கர்ணனாகவே வாழ்ந்தார் கர்ணன் படத்தில். மகாபாரதத்தின் தழுவலாக உருவான தளபதி படத்தில் ரஜினிகாந்த் கர்ணன் சாயல் கொண்ட பாத்திரத்தில் நடித்தார். அடுத்து கர்ணன் வேடம் ஏற்கவிருப்பவர் நடிகர் விக்ரம். ஆனால் இந்தப் படம் தமிழில் உருவாகவில்லை. மகாவீர் கர்ணா என்ற தலைப்பில் இந்தியில் மட்டும் உருவாகிறது. என்னு நின்டே மொய்தீன் என்ற படத்தை இயக்கிய ஆர்எஸ் விமல் இந்தப் படத்தை இயக்குகிறார். தமிழ் மற்றும் பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். "படத்தை முழுக்க இந்தியில்தான் எடுக்கிறோம். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் டப் பண்ணத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் முழுமையான அறிவிப்பு வரும்," என்கிறார் இயக்குநர் விமல். இப்போது துருவநட்சத்திரம், சாமி ஸ்கொயர் படங்களை முடித்துவிட்ட விக்ரம், மகாவீர் கர்ணாவுக்காக புதிய தோற்றத்துக்குத் தயாராகி வருகிறார்.

After Saamy square and dhuruva natchathiram, vikram is to act in the next new movie called Mahavir Karna in hindi. Vikram is going to play Karna role in Mahavir Karna mov

#vikram #mahavirkarna #saamy2 #dhuruvanatchathram

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS