வாரிசு நடிகர்களாக இருப்பது எளிது அல்ல: காஜல் அகர்வால்- வீடியோ

Filmibeat Tamil 2018-05-03

Views 1

வாரிசு நடிகர்களாக இருப்பது எளிது அல்ல என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் வாரிசு நடிகர்கள், நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மூன்று திரையுலகிலும் பணியாற்றும் காஜல் அகர்வால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். வாரிசு நடிகர்கள் பற்றி காஜல் அகர்வால் கூறியிருப்பதாவது, சினிமாவில் வாரிசுகளை தவிர மற்றவர்களை ஒதுக்குவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. வாரிசுகளுக்கு முதல் பட வாய்ப்பு தான் எளிதில் கிடைக்கும். ஆனால் அதன் பிறகு அவர்களின் திறமையால் மட்டுமே முன்னேற முடியும். மற்றவர்களை விட வாரிசு நடிகர்கள் மீது தான் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அதனால் அவர்கள் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற கூடுதலாக கஷ்டப்பட வேண்டும் என்கிறார் காஜல் அகர்வால்.

Actress Kajal Agarwal said that star kids like Vijay, Suriya and Karthi have to go extra mile as people expect more from them.

#kajalagarwal #vijay #suriya #karthi

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS