ட்விட்டரில் தோனியை பாராட்டி தள்ளிய பிரபலங்கள்! #DHONI

Filmibeat Tamil 2018-04-26

Views 2.5K

பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அருமையாக விளையாடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்த கேப்டன் தோனியை தமிழ் திரையுலக பிரபலங்கள் பாராட்டியுள்ளனர்.
கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதிய ஐபிஎல் போட்டி நேற்று பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது.
இந்த போட்டியில் தோனி விஸ்வரூபம் எடுத்து விளையாடியதால் சென்னை அணி வெற்றி பெற்றது. தோனியின் ஆட்டத்தை பார்த்தவர்களால் அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
தோனியின் அபார ஆட்டத்தை பார்த்த இயக்குனர் வெங்கட் பிரபு என்ன ஒரு வெற்றி, என்ன ஒரு மேட்ச், தல தோனி, ராயுடு என்ன ஒரு இன்னிங்ஸ் என்று நெகிழ்ந்து ட்வீட்டியுள்ளார்.
அருமையான மேட்ச். தோனி, என் நண்பன் ராயுடுவின் ஆட்டம் அபாரம் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
தோனி செம என்று இயக்குனர் சுசீந்திரன் பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.
யாருப்பா சொன்ன off side போட்டா தலைவன் தடுமாறுவான்னு. கடைசி சிக்சர் பார்த்தீரல்லோ. எல்லா சைடும் அவன் சைடு தான் என்கிறார் நீயா நானா புகழ் கோபிநாத்.
தோனியின் சூப்பர் ஆட்டத்தை பார்த்த நடிகை சஞ்சனா அவரை புகழ்ந்து தள்ளி ட்வீட்டியுள்ளார்.


Kollywood celebrities took to twitter to praise Chennai Super Kings captain Dhoni who did an aweosme job yesterday against Royal Challengers Bangalore team.

#dhoni #csk #ipl2018 #t20 #tweet #msdhoni #cskwin

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS