கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியை விட அதிக இடங்களில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் என்று ஏபிபி நியூஸ் சர்வே முடிவு சொல்கிறது. பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் தொங்கு சட்டசபையே அமைய வாய்ப்பு இருப்பதாக சர்வே கூறுகிறது. கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளில் எந்த கட்சியை ஆட்சியை பிடிக்கும் என்ற விறுவிறுப்பு அதிகரித்து வருகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கே ஆதரவு அதிகம் என்று ஒரு சில கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில் ஏபிபி நியூஸ் தொலைக்காட்சியின் சர்வே முடிவு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
ABP news tv survey results : BJP is set to become the single largest party with 89-95 seats while the incumbent Congress is likely to win anywhere between 85-91 seats.