பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி வாய்ப்பூட்டு போட்டுள்ளார். மீடியாவில் சமூக விஞ்ஞானிகள் போல உளறிக் கொட்டவேண்டாம் எனவும் பொது பிரச்சனைகளில் வரம்பு மீறி பேச வேண்டாம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
நமோ செயலி குறித்து பாஜக எம்.பி., எம்.எம்.எல்.ஏக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். இந்த உரையாடலின் போது பாஜக தலைவர்களின் பேச்சால் பிரதமர் அதிருப்தியில் இருப்பது வெளிப்பட்டது. கத்துவா,உன்னோவ் மற்றும் சூரத் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாஜகவினர் கூறும் கருத்துகளும், ஜம்முவில் குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் பாஜகவினர் பங்கேற்றது உள்ளிட்ட காரணங்கள் பாஜக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது