நிர்மலா தேவியிடம் 4வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை- வீடியோ

Oneindia Tamil 2018-04-23

Views 1.9K

பாலியல் தொழிலுக்கு மாணவிகளை அழைத்ததாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவியிடம் 4வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்னர். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவிகளைத் தவறான வழியில் செல்வதற்காக மூளைச்சலவை செய்யும் வகையில் பேராசிரியை நிர்மலாதேவி பேசிய ஆடியோ வெளியானது. மாணவர்கள், மகளிர் அமைப்பினரின் போராட்டத்தை அடுத்து கடந்த 17ஆம் தேதி நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்த நிர்மலா தேவியை ஐந்து நாட்கள் கஸ்டடியில் எடுத்து விருதுநகரில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முதல்நாள் விசாரணையின்போது காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் மற்றும் துணை பேராசிரியர் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தான் மாணவிகளிடம் பேசியதாக நிர்மலா தேவி தெரிவித்தார். நிர்மலா தேவி கூறிய இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.


CBICD sources said the house of professor Nirmala Devi of Devanga Arts College in Aruppukottai seized computer and crucial documents,CBCID officials sealed house say reports.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS