அமெரிக்கோவில் உள்ள பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை எப்படி நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவை காளப்பட்டியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி கல்விதுறை அமைச்சர் செகோட்டையன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த மாணவர்களின் ஓவியங்களை அமைச்சர்கள் பார்வையிட்டனர். இந்த விழாவில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , தமிழகத்தில் பல போராட்டங்கள் நடந்தாலும் அவற்றை சாதுர்யமாக எதிர்கொண்டு இந்த ஆட்சி சிறப்பாக நடைபெறுகின்றது எனவும் , கோவை மாவட்டத்திற்கு தேவையான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை இந்த அரசு வழங்கி உள்ளதாகவும், குறிப்பாக அதிக நிதி ஒதுக்கப்பட்டு பள்ளிக் கல்வித்துறைக்கு பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றது எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். தனைதொடந்து பேசிய பள்ளி கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் , அமெரிக்கோவில் உள்ள பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை எப்படி நடத்த வேண்டும் என ஆசிரியர்ரகளுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது என தெரிவித்தார்