பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைகளை கண்டித்தும் பெண்களுக்கு நாடுமுழுவதும் பாதுகாப்பை உறுதிபடுத்த கோரியும் தமிழக மக்கள் முன்னேற்றகழகத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர்
வேலூர்மாவட்டம்,வேலூர் அண்ணாகலையரங்கம் அருகில் தமிழக மக்கள் முன்னேற்றகழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் கட்சியின் மாவட்ட செயலாளர் தேவா தலைமையில் நடைபெற்றது இதனை மாநிலதுணை பொதுசெயலாளர் நல்லுசாமி துவங்கி வைத்தார் இதில் மகளிரணி பொருளாளர் ரேகா மற்றும் மதன் அன்புகிராண்ட் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைகள் அதிகரித்து வருகிறது குறிப்பாக ஆஷீபா படுகொலை தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் உத்தரபிரதேசம் குஜராத் ஆகிய மாநிலங்களில் பெண்கள் பாலியல் வன் கொடுமை ஆகியவைகள் நடக்கிறது இதனை தடுக்க வேண்டிய மத்திய மாநில அரசுகள் தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது எனவே பெண்களுக்கு பாதுகாப்பை வழங்க கோரியும் பாலியல் வன் கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க கோரியும் இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் திரளானோர் கலந்துகொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்