எல்.ஐ.சி, ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் தங்க நகை 80 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டு கோயில் வீதியை சேர்ந்தவர் கணேஷன் மகன் ஈஸ்வரன் இவர் எல்.ஐ .சி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.மேலும் மாச்சம்பட்
டு கிராமத்தில் உள்ள கிருத்துவ ஆலயத்தின் பொருளாளராக இருந்து வருகிறார்.இந்த நிலையில் வழக்கம் போல் தன்னுடைய மனைவி ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருவதாலும்,இவர்களுடைய இரண்டு பிள்ளைகள் ஆம்பூர் பெத்தேல் மெட்ரிக் பள்ளியில் படித்து வருவதால் நேற்று காலை வீட்டை பூட்டி கொண்டு மனைவி ஷீலா மற்றும் பிள்ளைகளை அழைத்து சென்று மீண்டும் மாலை வீடு திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 3 சவரன் தங்க சங்கிலி மற்றும் 80 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர் .இது குறித்து ஈஸ்வரன் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஈஸ்வரன் கிருத்துவ ஆலய பொருளாளராக இருந்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் ஆலயம் புதுபிக்கும் பணி தொடங்க இருப்பதால் ஆலயத்துக்கு சொந்தமான பணத்தை தனது வீட்டில் வைத்திருந்ததாகவும் அதோடு தன்னுடைய தங்க சங்கிலியையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக விசாரணையில் தெரிவித்துள்ளார் .இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த போலீசார் பணம் மற்றும் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்