ஸ்ரீரெட்டியின் மீது கொலைவெறியில் இருக்கும் பவர் ஸ்டார் ரசிகர்கள்- வீடியோ

Filmibeat Tamil 2018-04-18

Views 5K

நடிகை ஸ்ரீ ரெட்டி பவர் ஸ்டார் பவன் கல்யாணை எச்சரித்துள்ளார்.
டிவி நிகழ்ச்சிகளில் பேசாமல் போலீசாரிடம் புகார் அளிக்குமாறு நடிகர் பவன் கல்யாண் அறிவுரை வழங்கியது நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு பிடிக்கவில்லை. மூன்று முறை திருமணம் செய்த பவன் கல்யாணுக்கு பெண்கள் மீது மதிப்பே இல்லை என்று கூறி நடுவிரலை காட்டினார் ஸ்ரீ ரெட்டி.
இதை பார்த்த பவன் கல்யாணின் ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர்.
பவன் கல்யாண் பற்றி யார் தவறாக பேசினாலும் அவர்களை சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்துவிடுவார்கள் அவரின் ரசிகர்கள். இந்நிலையில் ஸ்ரீ ரெட்டியை மட்டும் சும்மா விடுவார்களா என்ன.
ஸ்ரீ ரெட்டியை கெட்ட கெட்ட வார்த்தையால் வறுத்தெடுத்து வருகிறார்கள் பவன் கல்யாண் ரசிகர்கள். சிலரோ அவரை பலாத்காரம் செய்துவிடுவதாகவும், கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
பணம் வேண்டும் என்றால் ஹைதராபாத்தில் சிவப்பு விளக்கு பகுதியை துவங்கவும். அதை விட்டுவிட்டு எங்கள் அண்ணனை பற்றி பேச வேண்டாம். இப்படி பேசினால் உயிருடன் இருக்க மாட்ட என்று பவன் கல்யாண் ரசிகர்கள் ஸ்ரீ ரெட்டியை மிரட்டியுள்ளார்.
பவன் கல்யாண் தனது ரசிகர்களை அடக்கி வைக்க வேண்டும். இல்லை என்றால் ரசிகர்களின் செயலுக்காக பவன் கல்யாண் மீது வழக்கு தொடர்வேன். அவர்கள் ரசிகர்கள் அல்ல கிரிமினல்கள். அவர் அமைதியாக இருப்பது ரசிகர்களை ஊக்குவிப்பது போன்று உள்ளது என்று பொறிந்து தள்ளியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

Starlet Sri Reddy has warned Pawan Kalyan to calm down his unruly fans else to face legal action. Pawan Kalyan fans are trolling her for showing middle finger to him.

#srireddy #pawankalyan #srileaks

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS