கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவி ஏற்கனவே பல மாணவிகளை விவிஐபிகளுக்கு விருந்தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள் முதல் விவிஐபிக்கள் வரை பலரது பெயர்களை பேராசிரியை தெரிவித்திருப்பதாக கூறப்படுவதால், இந்த பிரச்னை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி கணிதவியல் துறை உதவி பேராசிரியை நிர்மலாதேவி, இவர், அக்கல்லூரி மாணவிகள் சிலரிடம் பேசிய ஆடியோ, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
Nirmala Devi, who was arrested on the complaint of misconduct by college students, has already reported that many students have been invited to the VVIPs.