ஜெயலலிதா இறப்பு பற்றி சசிகலா வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி-வீடியோ

Oneindia Tamil 2018-04-17

Views 3

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் மாதம் 5ம் தேதி தான் இறந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா, மகன் விவேக், அரசு மருத்துவர் சுவாமிநாதன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெங்கட்ரமணன், ஜெயலலிதா வீட்டில் சமையல் வேலை பார்த்த ராஜம்மாள், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உடற்கூறு இயல் துறை தலைவர் டாக்டர் சுதா சேஷையன் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞரான ராஜாசெந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS