ஹைதராபாத்தில் மெக்கா மசூதியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேசிய குற்றப்புலனாய்வு அமைப்பால் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரில் 5 பேரின் தண்டனையை நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2007, மே 18ம் தேதி சார்மினாருக்கு அருகில் இருந்த மெக்கா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்த போது சக்திவாய்ந்த வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர்,58 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பின் போது வெடிக்காத 2 சக்திவாய்ந்த வெடிகுண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர், இதோடு மசூதிக்கு வெளியே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் 5 பேர் உயிரிழந்தனர்.