கத்துவாவில் 8 வயது காஷ்மீர் சிறுமி கொல்லப்பட்டது சரிதான் என்று முகநூலில் கருத்து போட்ட கேரள இளைஞர் விஷ்ணு நந்தகுமார் வங்கிப் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். விஷ்ணுவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் அவரை பணி நீக்கம் செய்ய கோரியதையடுத்து அவரின் வங்கிப் பணி பறிபோயுள்ளது. Loading ad ஜம்மு காஷ்மீரின் கத்துவாவில் 8 வயது சிறுமி கயவர்கள் சிலரால் அடைத்து வைக்கப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். நாடே காஷ்மீர் சிறுமிக்காக கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிறுமியின் கொலை நியாயமானது தான் என்று கீழ்த்தரமான கருத்தை கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு நந்தகுமார் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
Private bank in Kerala was forced to sack its employee after he made derogatory comments about the 8-year-old girl raped and killed in Jammu's Kathua.