தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு !!

Oneindia Tamil 2018-04-13

Views 1

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு இந்த அகவிலைப்படி உயர்வானது ஊழியர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பாக தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது : அலுவலர் குழு பரிந்துரை பேரில் கடந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கான சம்பளம், அகவிலைப்படியை திருத்தி கடந்த 11.10.17 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தற்போது வழங்கப்படும் 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக 1.1.18 தேதியில் இருந்து உயர்த்தி 15.3.18 அன்று மத்திய நிதித்துறை உத்தரவிட்டது.


Followed by Central government employees DA hike tamilnadu government increased dearness allowance to employees to 7 Percentage, the hike to be implemented from January 1st.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS