அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவ்வழியாக சிஎஸ்கே யூனிஃபார்ம் போட்டு சென்ற ரசிகர்களை விரட்டி விரட்டி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களா அல்லது போராட்டக்காரர்கள் என்ற போர்வையில் நுழைந்த சட்டவிரோத கும்பலா எனத் தெரியவில்லை. சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து திரைத்துறையை சேர்ந்தவர்கள் உட்பட பலரும் சென்னை அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் சென்னை அண்ணாசாலை ஸ்தம்பித்தது. போராட்டக்காரர்கள் சிஎஸ்கே யூனிஃபார்ம், டிக்கெட் உள்ளிட்டவற்றை எரித்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
Protesters attacked fans who wore CSK uniform to Chennai Annasalai.