கோவில் திருவிழாவில் கலந்துக்கொள்ள வந்த பக்தர்களை அமைச்சரின் பாதுகாப்பு போலீஸார் தாக்கியதால் ஆத்திரமடைந்த பக்தர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக் கொண்டனர் இந்தக் கோவிலின் தேரோட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வடம் பிடித்து துவக்கிவைத்தார் . அன்னதானப் பந்தலில் பக்தர்களுக்கு உணவு பரிமாறும் நிகழ்ச்சியிலும் அமைச்சர் கலந்துக்கொண்டார். பின்னர் நார்த்தாமலையிலிருந்து கிளம்பினார். பக்தர்கள் கூட்டம் எந்தவருடமும் இல்லாத அதிகமாக இருந்தது. சாலையெங்கும் நிரம்பி வழிந்த கூட்டத்தின் நடுவில் அமைச்சரின் கார் அதனைத்தொடர்ந்து அமைச்சரின் பாதுகாப்பு போலீஸார் வாகனம் வந்தது.பொம்மாடிமலை விலக்கு அருகே அமைச்சரின் வாகனத்தை தொடர்ந்து செல்ல பாதுகாப்பு போலீஸார் வாகனம் வேகமாகச்சென்றது. அப்போது கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துள்ளது. இதனால் முன்னேறிச்செல்ல முடியாத சூழல் அமைச்சரின் பாதுகாப்பு போலீஸார் வாகனத்துக்கு ஏற்பட்டது. இதனால் உண்டான விரக்தியில் ஆத்திரமடைந்த போலீஸார் கடவுள் வேடமிட்டு ஆடிச்சென்ற இரு பக்தர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. கூடச்சென்ற பெண் பக்தர்களையும் பிடித்துத் தள்ளி விட்டதாகவும் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலை திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களுடன் போலிசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் மறியல் கைவிடப்பட்டது.
des : Devotees angry at the minister's security guard attacked devotees who attended the temple festival