சமுக வலைதளங்களில் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து விமர்சனம் செய்ததால் தனக்கு கொலை மிரட்டல் விடப்படுவதாக சித்தர் ஒருவர் புகார் அளித்துள்ளார்
மதுரையில் உள்ள சித்தர் ஒருவர் தனது சமுக வலைத்தளத்தில் கர்நாடாகவை சேர்ந்த ஒருவர் அண்ணா பல்கலைகழகதிற்கு வேந்தாராக நியமிக்கப்பட்டதற்கும் துணை வேந்தர் நியமனத்தில் தமிழக அரசு தலையிடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கும் கண்டம் தெரிவித்து பதிவிட்டிருந்தார் மேலும் அமைச்சர் ஜெயக்குமார் பொறுப்பற்ற வகையில் பேசி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார் . இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர் என்று கூறி மர்ம நபர் ஒருவர் சித்தருக்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார் . இதனால் தனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சித்தர் புகார் அளித்துள்ளார்
des : aSiddharth has complained that he is threatened with murder because he criticized Jayakumar for social networking sites