பாஜக மாநில தலைவர் தமிழிசையும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் தமிழின துரோகிகள் என்று மணியரசன் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார். தமிழகத்துக்கு தண்ணீர் தராத கர்நாடகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கன்னடர் ஒருவரை துணை வேந்தராக நியமித்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து விளக்கம் கேட்க பாரதிராஜா, கவுதமன், அமீர் உள்ளிட்டோர் நேற்றைய தினம் ஆளுநர் மாளிகைக்கு சென்றிருந்தனர். சூரப்பா நியமனத்தில் எந்த விதிமீறலும் இல்லை என்று ஆளுநர் கூறியதாக பாரதிராஜா தெரிவித்தார்.