தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தான் தமிழ்நாட்டின் முதல் எதிரி என்று மதிமுக தலைவர் வைகோ தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த 31 ஆம் தேதி மதுரையில் தன் நடைபயணத்தை தொடர்ந்தார். ஆறாம் நாளான நடைபயணத்தில் போடி பொதுமக்களை சந்தித்து நியுட்ரினோதிட்டம் ஆரம்பிக்கப்பட்டால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் பாதிப்புகளையும் எடுத்துரைத்தார் ஆப்போது பேசிய வைகோ தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் விதமாகவும் தமிழக விவசயத்தையும் தமிழக மக்களையும் அழிக்கும் நோக்கில் மத்தியஅரசின் செயல்பாடு தொடருமே ஆனால் ஆந்திராவிலிருந்து எப்படி தொலுங்கான பிரிக்கப்பட்டதோ அதே போல் தமிழகத்தில் ஏற்படும் பிறகு மத்தியில் ஆளுகை செய்பவர் யாராக இருந்தாலும் தமிழகத்திற்க்குள் நுழைய முடியாது என்று தெரிவித்தார் மேலும் தமிழகத்தில் அம்பேத்கர் பல்கலைகழகத்திற்க்கும் ஆந்திராவை சேர்ந்தவரையும் அண்ணா பல்கழைக்கலத்தில் துணைவேந்தராக கர்நாடகத்தைச்சார்ந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச்சார்ந்தவர்களை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்நியமித்துள்ளது மிகவும் கண்டக்கத்தக்கது என்றும் நீ தமிழ்நாட்டின் முதல் எதிரி என்றும் பன்வாரிலால் புரொகித்தா அல்லது புரோக்கரா என்று ஆவேசமாக பேசினார்
des : MDMK leader Vaiko said that the governor of Tamilnadu Panwarilal Purohit is the first enemy of Tamil Nadu.