வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்பு- வீடியோ

Oneindia Tamil 2018-04-09

Views 2

வீட்டிற்குள் இருந்த புதையலை எடுத்து மறைத்து வைத்தவர்களிடம் வருவாய்துறையினர் மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்



கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரண்டப்பள்ளி அருகேயுள்ள பூதனூர் கிராமத்தில் புதையல் எடுப்பதற்காக வீட்டில் பள்ளம் தோண்டப்படுவதாக வருவாய்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் போச்சம்பள்ளி வாருவாய் ஆய்வாளர் நல்லதம்பி கிராம நிர்வாக அலுவலர் சர்வேந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். பிறகு புதையல் எடுக்க பள்ளம் தோன்னடப்பட்டது உறுதிசெய்யப்பட்டு போச்சம்பள்ளி வட்டாச்சியருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வட்டாச்சியர் கோபிநாத்நேரில் விசாரணை நடத்தினார். விசாரணையில் பூதனூர் கிராமத்தை சேர்ந்த அனுமன் மனைவி ராஜம்மாள் என்பவரது வீட்டில் தோண்டப்பட்ட பள்ளம் குறித்து கேட்டார். அதற்க்கு ராஜம்மாள் எங்களது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் முருகன் மகன் ரமேஷ் என்பவரது வீட்டிற்கு சென்னையில் இருந்து பூசாரி வந்திருந்தார். அவர்கள் வீட்டில் செய்வினை இருப்பதாக கூறி அதனை எடுத்தார். பிறகு நான் அந்த பூசாரியிடம் எனது கணவர் இறந்து இருபது ஆண்டுகள் ஆகிறது. எனது மகன் சென்னகிருஷ்ணன் என்னை விட்டு எங்கேயோ சென்று பதினைந்து ஆண்டுகள் ஆகிறது இதுவரை வீடு திரும்பவில்லை எனக்கும் எனது வீட்டினுள் சென்றால் கை, கால் வாராமல் உள்ளது என்று கூறினேன், அதற்க்கு அந்த பூசாரி உனது வீட்டில் செய்வினை செய்து நடு வீட்டில் புதைத்து வைத்துள்ளனர் அதனால்தான் உனக்கு இந்த கஷ்டம் அதனை எடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறிஅவரிடமிருந்து ரூபாய் 5 ஆயிரம் பெற்றதாக கூறினார். பிறகு அவர் வெள்ளிக்கிழமை இரவு வந்து வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாட்கள் பூஜை செய்து பிறகு ஞாயிற்றுக்கிழமை இரவு பூஜை செய்து 10 மணிக்கு ரமேஷ் ஒருவரே பள்ளம் தொண்டியதாகவும் அதில் எழுமிச்சைப்பழம், தாயத்து, நீர் ஆகியவை இருந்ததாகவும் மேலும் ஒரு நடராஜர் சிலையும்,ஒரு சிறிய தூக்கு சட்டி, காமாட்சியம்மண் விளக்கு இருந்தது அதனை எடுத்து ரமேஷ் என்பவரது வீட்டின் மீது வைத்து விட்டோம் என்று கூறினார். பிறகு வட்டாச்சியர் கோபிநாத் ரமேஷ் புதியதாக வீடு கட்ட தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் பள்ளம் பறித்து பார்த்தும் அருகிலிருந்த வீட்டினரையும் விசாரணை நடத்தினார். இதுகுறித்து போச்சம்பள்ளி காவல்துறையினர் ராஜம்மாள், ரமேஷ் ஆகியோரிடம் பூஜை செய்ய வந்த பூசாரியின் விபரம் குறித்து விசாரணை நடத்திவருகின்றானர். இச்சம்பவம் போச்சம்பள்ளி சுற்றுப்புறகிராமங்களில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது



DES : Three fifty statues are being investigated for the hijackers in the house

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS