ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா வீரர் நிதீஷ் ராணா, பெங்களூர் கேப்டன் கோஹ்லி விக்கெட்டை எடுத்தார். விக்கெட் எடுத்த பின் கோஹ்லியை கோபமாக திட்டி ராணா பெவிலியன் அனுப்பினார். நேற்று நடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது.
இதில் கொல்கத்தா வீரர் நிதீஷ் ராணா மிகவும் சிறப்பாக விளையாடினார். ஒரே ஓவர் வீசி அவர் இரண்டு விக்கெட் எடுத்தார். அதே போல் பேட்டிங்கில் அவர் 25 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரி அடக்கம்.
kolkatta player raana scold virat kohli