கம்பி எண்ணும் சல்மான் கான்.

Filmibeat Tamil 2018-04-05

Views 4.4K

பாலிவுட் நடிகர் சல்மான் கானை கடந்த 19 வருடங்களாகச் சுற்றி வரும் மான் வேட்டையாடிய வழக்கில் இன்று ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சல்மான் கானை குற்றவாளி என அறித்துள்ளது ஜோத்பூர் நீதிமன்றம்.
கடந்த 1998-ம் ஆண்டு, ராஜஸ்தானில் நடைபெற்ற ஷூட்டிங்கின்போது, வனப் பகுதியில் அரிய வகை மான்களை நடிகர் சல்மான் கான் வேட்டையாடியதாகவும், அவர் வேட்டையாடும்போது நடிகர் சயீப் அலிகான் நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் உடனிருந்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. பல வருடங்களாக நடந்துவந்த இந்த வழக்கில், கடந்த 2007-ம் ஆண்டு நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஜோத்பூர் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சல்மான் கான் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கின் முழு விசாரணையும் முடிக்கப்பட்டு தீர்ப்பு இன்று வெளியாகும் என ஏற்கெனவே ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று காலை கூடிய ஜோத்பூர் நீதிமன்றத்தில், தொடர்புடைய நடிகர்கள் அனைவரும் நேரில் வந்து ஆஜராகினர். நடிகர் சல்மான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள சல்மான் கான் விரைவில் ஜெயிலில் அடைக்கப்படுவார் எனத் தெரிகிறது.


Jodhpur court convicted bollywood actor Salman in deer poaching case. Salman has been sentenced to five years imprisonment and a penalty of Rs 10,000.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS