ரயில்வே கழிவுகளை சமூகவிரோதிகள் வைத்த தீயால் ஏற்பட்ட கரும்புகையால் ரயில்வே குடியிருப்பில் இருந்த மக்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு பீதி அடைந்தனர்
வேலூர்மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உள்ள காலி இடத்தில் ரயில் பெட்டிகளில் சீட்கவர்கள் மற்றும் கட்டைகள் போன்ற பயனற்ற பாகங்களை ரயில்வே நிர்வாகம் பொட்டு வைத்துள்ளனர் இந்நிலையில் சில சமூகவிரோதிகள் அவற்றிற்கு தீ வைத்துள்ளனர் கோடைகாலம்என்பதால் சுமார் 500 மீட்டர் சுற்றளவில் மளமளவென்று தீ பரவியது. இதனை கண்ட ரயில்வே குடியிருப்பு வாசிகள் அரக்கோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ராட்சததீயால் கரும்புகை ரயில்வே குடியிருப்பு முழுவதும் சூழ்ந்து புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பீதி அடைந்தனர்
DES : People who were in the railway resort panicked by the snakes caused by firefighting