நாம் தமிழர் கட்சி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. இதனை எதிர்த்து நாம் தமிழர்கள் தொண்டர்களின் தாக்குதல் முயற்சி என அரசியல் வட்டாரம் தகிக்கத் தொடங்கியிருக்கிறது. ' அவர் பெரியவர் ஏதோ நம் மீதிருக்கும் கோவத்தில் அப்படிப் பேசுகிறார். அவருக்கு மட்டுமல்ல காலம் எல்லோருக்கும் புரியவைக்கும்' எனப் பேசியிருக்கிறார் சீமான். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வெள்ளையர் ஆட்சிக் கால கைரேகை சட்டத்தை எதிர்த்து, போராடி உயிரிழந்த பதினாறு பேரின் நினைவிடம் உள்ளது. இந்த நினைவு தினத்துக்காக மரியாதை செலுத்த வைகோ சென்றார்.
Naam Thamizhar Party leader Seeman commented on Vaiko's strong criticism against him.