பன்னாரி கோவில் திருவிழா

Oneindia Tamil 2018-04-04

Views 2

கோலாகலமாக நடைபெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.

தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் பிரசித்தி பெற்றது அருள்மிகு பண்ணாரியம்மன் திருக்கோயில் இக்கோயில் விழா கடந்த 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி பல்வேறு கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது. குண்டம் வளாகத்தில் சவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் வரிசைப்படுத்தப்பட்டனர் ஒரே நேரத்தில் ஆண் பெண் பக்தர்களின் குண்டம் இறங்குவதற்கான வசதிகளும்.அவர்கள் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசித்து விட்டு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று அதிகாலை நடைபெற்ற குண்டம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர் கர்நாடக மாநிலம் மைசூர் சாம்ராஜ்நகர் தமிழகத்தில் மதுரை கோவை சேலம் தருமபுரி ஆகிய ஊர்களில் இருந்து வேன் லாரி கார் பஸ் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர்.பக்தர்களின் வசதிக்காக நூற்றுக்கணக்கான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. . பாதுகாப்பு பணிக்காக 8 மாவட்டங்களில் இருந்து 1500 போலீஸார் வரவழைக்கப்பட்டனர்

des : Thousands of devotees gathered in the temple to participate in the Kundam festival at Pannari Amman Temple.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS