சாய் பல்லவி வேணாம். நயன் தான் வேணும் என்று கேட்ட சிவகார்த்திகேயன்!

Filmibeat Tamil 2018-04-03

Views 9.1K

வேலைக்காரன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன், நயன்தாரா மீண்டும் சேர்ந்து நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடியாக நடித்தனர். இதன் மூலம் நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. இருப்பினும் மீண்டும் நயன்தாராவுடன் ஜோடி சேர விரும்புவதாக சிவகார்த்திகேயன் தெரிவித்தார். சீமராஜா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார். அதன் பிறகு ராஜேஷ் இயக்கத்தில் காமெடி படம் ஒன்றில் நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயன், ராஜேஷ் சேர்ந்து பணியாற்றும் படத்தில் சாய் பல்லவியை ஹீரோயினாக்க முடிவு செய்தததாக கூறப்பட்டது. ஆனால் சாய் பல்லவியிடம் டேட்ஸ் இல்லையாம். ராஜேஷ் இயக்கும் படத்தில் நயன்தாராவை சிவாகார்த்திகேயனுக்கு ஜோடியாக்க உள்ளார்களாம். இது குறித்து நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.நயன்தாரா தற்போது சிரஞ்சீவி ஜோடியாக சயீரா நரசிம்ம ரெட்டி தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அஜீத்தின் விசுவாசம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

According to reports, M. Rajesh is trying to get Nayanthara on board for his upcoming movie with Sivakarthikeyan. Nayanthara and Sivakarthikeyan earlier shared screen space in Velaikkaran.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS